வாவ்.. கியூட் Couples… காஷ்மீர் குளிரில் கணவருடன் என்ஜாய் பண்ணும் பிரபல சீரியல் நடிகை… வெளியான ரொமான்டிக் புகைப்படங்கள்…

By Begam on மார்கழி 11, 2023

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரித்திகா தமிழ்செல்வி.

   

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் கூட பங்கு பெற்று வருகிறார். மேலும் இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமும் மிகப் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து அவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவரை கேரளாவில் திருமணம் செய்து கொண்டார்.

   

 

ஆனால் அவர் திருமணத்திற்கு பிறகு சில எபிசோட் நடித்துவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் இப்போது அக்ஷிதா என்ற நடிகை நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரித்திகா. இவர் அவ்வப்பொழுது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில்  இவர் கணவருடன் இணைந்து முதல் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து  தற்பொழுது இவர் கணவருடன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சென்றுள்ள புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.