ஸ்கூல் படிக்கும்போது ஒரு பையன் 2 வருஷமா என்னை Follow பண்ணுனான்… ஆனா கடைசியில… சமந்தா பகிர்ந்த தகவல்…!

By Soundarya on கார்த்திகை 15, 2024

Spread the love

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை தான் நடிகை சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்  விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். நடிகர் நாக சைதன்யா கடந்த 2017 ஆம் வருடம் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண வாழ்க்கை ஆனது நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்து விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டார்கள்.

   

பின்னர் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்றும் அறிவித்தார். தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நோயிலிருந்து  மீண்டு வந்த இவர் இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்தார்.

   

 

சாகுந்தலம், குஷி என இந்த இரண்டு படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. சினிமாவில் இருந்து ஒதுங்கிய இவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய இவர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். மேலும் நடிகை சமந்தா அவ்வப்போது லேட்டஸ் புகைப்படங்கள் இணையத்தில் பதிவிட வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் பள்ளிப்பருவ காதல் கதை குறித்து பேசியுள்ளார். அதாவது, சமந்தா 10th படித்து கொண்டிருக்கும்போது, தினமும் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வரும் போது ஒரு பையன் இவரை பின் தொடர்வதை வழக்கமாக வைத்திருந்தாராம். சுமார் 2 வருடங்கள் அந்த பையன் பின்தொடர்ந்தாரம்.  ஒரு நாள் கூட சமந்தாவிடம் வந்து பேசியது இல்லையாம். இந்நிலையில் ஒருநாள் சமந்தாவே ஏன் என்னை பின்தொடர்ந்து வரீங்க, ஆனா எதுவும் பேச மாட்ரீங்க என்று கேட்டாராம். அதற்கு அவர் சமந்தா கற்பனை கூட செய்து “நான் உன்னை பின்தொடர்கிறேன் என்று யார் சொன்னது? என்று ஷாக் கொடுத்தாராம்.