‘இப்ப எப்படி kidnap பண்றது?’… பாடகி சின்மயி-யின் இரட்டைக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை சமந்தா… வைரலாகும் வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

   

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களையே பெற்றது. தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

‘குஷி’ திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டிஷ்  என்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு மேலாக சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர்  வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார்.அதை தொடர்ந்து கோவை ஈஷா மையத்திற்கு சென்றார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலானது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். தற்பொழுது நடிகை சமந்தா  பாடகி சின்மயியின் இரட்டைக் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…