Categories: சினிமா

நீங்கள் தான் அதை செய்ய வேண்டும்.. ஈஷா மையத்தில் குடியேறிய நடிகை சமந்தா.. என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா..?

Spread the love

பிரபல நடிகையான சமந்தா முன்னணி நடிகர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்டருடன் இணைந்து நடித்த படங்கள் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் சமந்தா நடித்துள்ளார்.

பிரபல நடிகரான நாக சைதன்யாவை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து விட்டனர். சமந்தா மையோசிட்டிஸ் சென்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் சினிமாவில் இருந்து விலகி உடல்நலத்தை கவனித்து வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறியதால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இப்போது சமந்தா சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தில் ஆக்சன் ஹீரோயின் ஆகவும் சமந்தா நடிக்க உள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்வதை போன்ற புகைப்படங்களை சமந்தா சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.

அதில் சமந்தா கூறி இருப்பதாவது, நம்மில் பலரும் குரு அல்லது ஆலோசகரை தேடுகிறோம். நம் வாழ்க்கை ஒளிர செய்பவரை கண்டால் அது அறிய பாக்கியம். ஞானம் வேண்டும் என்றால் அதனை நீங்கள் தான் உலகில் தேட வேண்டும். ஏனென்றால் நாள்தோறும் உங்கள் மீது பல்வேறு விஷயங்கள் திணிக்கப்படுகிறது. ஞானத்தை பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்காக நீங்கள் தான் உழைக்க வேண்டும்.

நீங்கள் பலவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் போதாது. அதனை செயல்படுத்துவதும் முக்கியமானது என கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சமந்தா ஈஷா யோகா மையத்திற்கு சென்று தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். பிரம்மாண்டமாக நடைபெறும் சிவராத்திரி விழாவிலும் சமந்தா ஆண்டுதோறும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் சமந்தா பகிர்ந்த போட்டோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

8 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

8 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

9 மணத்தியாலங்கள் ago