Categories: சினிமா

விக்ரம் படத்தில் நடிக்க No சொன்ன நடிகை சாய் பல்லவி.. அடுத்த சாய்ஸ் இந்த நடிகை தானா..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவர் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் மூலமாகத்தான் தனக்கென ஒரு புகழை சினிமாவில் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்தது போல உடலை மாற்றிக் கொண்டு நடிப்பதில் பெயர் போனவர். குறிப்பாக ஐ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இறுதியாக இவர் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. அடுத்தபடியாக எஸ்யூ அருண்குமார் இயக்கியுள்ள வீரதீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது விக்ரம் நடிக்க உள்ள 63 வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மண்டேலா மற்றும் மாவீரன் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வினுடன் விக்ரம் கைகோர்த்துள்ளார். இது திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது.

தீவிர அரசியல் கதைக்களத்தை காமெடியாக சொல்வது தான் இவருடைய பெரிய பலம் என்று சொல்லலாம்.  படத்தில் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் விக்ரம் நடிக்க உள்ள 63வது திரைப்படத்தில் முதலில் நடிக்கப்பட குழுவினர் சாய் பல்லவி இடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் கதாநாயகிக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் அமரன் படத்தில் வெற்றிக்குப் பிறகு சாய் பல்லவியை ஹீரோயினியாக வைக்கலாம் என்று யோசித்து அவரை அழைத்த நிலையில் அவர் மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனைத் தொடர்ந்து மாளவிகா மோகனன் மற்றும் கே ஜி எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

Nanthini

Recent Posts

“திமுக, அதிமுகவுக்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி”…. நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்…. அதிர்ந்துபோன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…

9 seconds ago

“நம்ம பெப்ஸி உமாவா இது?.. இத்தனை வருசமா எங்க இருந்தாங்க?”… வைரலாகும் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த 90s கிட்ஸ்…!

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 90-கள் மற்றும் 2000-களின் தொடக்கத்தில் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்…

7 minutes ago

ஒரே நாளில் ரூ.5.77 லட்சம் கோடி அவுட்… கரடியின் பிடியில் சிக்கிய இந்தியப் பங்குச்சந்தை… முதலீட்டாளர்கள் அதிர்ச்சி… பங்குச்சந்தையை நிலைகுலைய வைத்த ‘ஏஐ’ புயல்….!

பங்குச்சந்தைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்த போர்ச் சூழல் நீங்கி, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியதால் சந்தை மீளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,…

15 minutes ago

“அப்பா, அம்மா, தங்கை”…. ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூரக் கொலை… குளியலறையை கழுவிய மகள்… பெங்களூருவில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் துரோகம்….!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…

23 minutes ago

“அந்த பேரு கூட பொய் தான்..” இன்ஃப்ளூயன்சர் பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய கொடூரன்… ஹோட்டலுக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை… டெல்லியில் பரபரப்பு…!

இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…

30 minutes ago

“அப்பா என்னை காப்பாத்துங்க…” மரணத்தின் விளிம்பிலிருந்து வந்த அந்த ஒரு போன் கால்… நெஞ்சை பிளக்கும் லக்னோ விபத்தின் சோக சம்பவம்….!

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…

36 minutes ago