CINEMA
நடிகை ரோஜாவின் விஜயதசமி கொண்டாட்டம்….வைரலாகும் வீடியோ இதோ…
நடிகை ரோஜா இன்று தசராவை ஆந்திராவில் உள்ள தனது வீட்டில் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், பிரஷாந்த்தின் ஜோடியாக ‘செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகை ரோஜா இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திரா மாநிலத்தில் எம்எல்ஏவாகவும் பதவி வகித்து வருகிறார்.
நடிகை ரோஜா அடிக்கடி கோயிலுக்கு செல்வதும், வீட்டில் பூஜை செய்வதுமாய் இருப்பவர். இவருக்கு கடவுள் பக்தி அதிகம். இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாவதை நாம் பார்த்திருப்போம். தற்பொழுது நடிகை ரோஜா ஆந்திராவில் உள்ள தனது வீட்டில் தசராவை சிறப்பாக கொண்டாடியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.