நடிகை ரோஜா ஆந்திராவைச் சேர்ந்தவர். தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவரது கணவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. நடிகை ரோஜா கடந்த பல ஆண்டுகளாக ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை ரோஜா கூறுகையில், லியோ படத்தில் கரு கரு கருப்பாயி என்ற பாடல் காட்சி இடம் பெற்றது. இதில் விஜய் நடனமாடி நடித்திருந்தார்.
அதனால் இந்த பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் ட்ரெண்டிங் ஆனதால் பலரும் இந்த பாட்டை யூடியூப்பில் தேடுகின்றனர். அப்போது நானும் பிரபுதேவாவும் பாடிய கருகரு கருப்பாயி பாடல் அதில் வருகிறது. இதனால் பெரும்பாலான ரசிகர்கள் அந்த பாடலையும் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் நான் நடித்த கருகரு கருப்பாயி பாடலை, லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்தது எனக்கு பெரிய கவனத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இதற்காக விஜய்க்கு ரொம்ப நன்றி என்று நடிகை ரோஜா அதில் கூறியிருக்கிறார்.
