#image_title
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. தமிழில் சன் டிவி , விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் என பல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து சீரியல் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். ரேஷ்மா முரளிதரன் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான இவருக்கு பூவே பூச்சூடவா சீரியல் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.
அதைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டெய்லர் என்கின்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா பிரச்சினை காரணமாக அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. பின்னர் ரேஷ்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ராடன் மீடியா தயாரிப்பில் விஜயின் அப்பாவான சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடிக்க அவருக்கு மகளாக ரேஷ்மா நடித்திருந்தார்.
இந்த சீரியல் தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்தது. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி என்கின்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனம் ஆடினார். தற்போது ரேஷ்மாவுக்கு மற்றொரு புதிய சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கின்றார்.
ஜெய் ஆகாஷ் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த நீதானே என் பொன்வசந்தம் என்ற தொடரில் நாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷனா நடித்திருந்தா.ர் தற்போது ரேஷ்மா முரளிதனுடன் இணைந்து புதிய சீரியலில் நடிக்க இருக்கின்றார். இந்த தொடரை ஈஸ்டர் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…