கலாபக்காதலன் பட நடிகைக்கு கல்யாணமாகி இவ்வளவு பெரிய பசங்க இருக்காங்களா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

By Mahalakshmi on ஆனி 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரேணுகா மேனன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் ரேணுகா மேனன்.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கின்றார். தமிழில் கலாபகாதலன், தாஸ், பிப்ரவரி 14 உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்த இவர் 2006 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன சூராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வந்த இவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

   

 

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டு கலிபோர்னியாவிலேயே செட்டில் ஆகிவிட்டார். நடிகை ரேணுகா மேனன் அங்கேயே நடன பள்ளி ஒன்றையும் நிறுவி இருக்கின்றார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். 15 வருடத்திற்கும் மேலாக கலிபோர்னியாவில் வசித்து வரும் அதன் பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்கவில்லை .

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தன் குழந்தைகளுடனும் கணவருடனும் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தனது குடும்பத்துடன் ட்ரிப் சென்று இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைங்க இருக்காங்களா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.