விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ஏராளமானோர் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போடுகிறது.
இந்நிலையில் ராதிகா கோபியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கோபியின் அம்மாவும் வருகிறார். இதனால் ராதிகாவின் தாய்க்கும் கோபியின் தாய்க்கும் இடையே சண்டை நடக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலை பார்ப்பதற்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த சம்பள விவரம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சுசித்ரா ஒரு நாள் படப்பிடிப்புக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷ் 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
இதனை அடுத்து ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா 12 ஆயிரம் ரூபாய் சம்பளமும், செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஷால் 10 ஆயிரம் ரூபாய் சம்பளமும் வாங்குகின்றனர். தொடர்ந்து ஜெனி திவ்யா கணேஷுக்கு ஒரு நாள் படப்பிடிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாகவும், இனியாவுக்கு 8 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.