என்னது பிக் பாஸ் வீட்டுக்குள்ள நா போறானா..?? நடிகை ரேகா நாயர் அளித்த ஷாக்கிங் பதில்..

By Begam on புரட்டாதி 15, 2023

Spread the love

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘பிக் பாஸ்’ இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில்இந்நிகழ்ச்சிக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் இருந்து வருகிறது. இந்நிகழ்ச்சி போட்டியாளராக  கலந்து கொள்பவர்கள்  மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருக்கிறார்கள். அதனால் இந்த ஷோவுக்கு செல்ல பல பிரபலங்களும் வெயிட்டிங் உள்ளனர்.

   

‘பிக் பாஸ் சீசன் 6’ சென்ற வருடம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது  பிக் பாஸ் சீசன் 7 அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் தற்போது இரண்டு வீடுகள் செட் போடப்பட்டு இருப்பதாகவும் போட்டியாளர்கள் இரண்டு டீம்களாக பிரிக்கப்பட்டு அந்த வீடுகளில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர்.

   

 

மேலும் ஒருகட்டத்தில் அந்த இரண்டு வீடுகளும் ஒன்றாக இணைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில், ரேகா நாயர், ம கா பா ஆனந்த், விஜே பாவனாஆகியோரின் பெயர்கள் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.பிரபலமான பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகை ரேகா நாயரிடம் இது குறித்து பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பபட்டுள்ளது.

அதற்கு அவர் ‘காட்டில் கூட எத்தனை நாள் வேண்டுமானாலும் இருப்பேன். ஆனால் பிக் பாஸ் வீட்டுக்கு போக மாட்டேன்” என கூறி இருக்கிறார். எனவே அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவதில்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவரை எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.