இந்த புகைப்படத்தில் அம்மா, அப்பாவுடன் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா..? சின்ன வயசிலும் கியூட்டா இருக்காங்களே..!!

By Priya Ram on ஆகஸ்ட் 30, 2024

Spread the love

சோசியல் மீடியாவில் திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் ஒரு குழந்தை தனது அப்பா அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. அது வேறு யாருமில்லை. நடிகையும் டப்பிங் கலைஞருமான ரவீனா தான். ரவீனாவின் தந்தை ரவி புகழ்பெற்ற டப்பிங் கலைஞர் ஆவார்.

#image_title

அவரது தாய் ஸ்ரீஜாவும் நடிகையாகவும் டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார்.கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீசான ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார் ரவீனா. அதன்பிறகு காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்தார்.

   
   

Image

 

கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர்ஹிட் ஆன லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் அக்காவாக நடித்து ரவீனா தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இது மட்டுமில்லாமல் சாட்டை, நிமிர்ந்து நில், கத்தி, அனேகன், ஐ, பொன்னியின் செல்வன் 1 உள்ளிட்ட படங்களில் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ரவீனாவின் சிறு வயது புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் சின்ன வயசிலும் ரவீனா கியூட்டாக இருக்கிறாரே என்ன கமெண்ட் செய்து வருகின்றனர்.