விஜய் மீது எனக்கு கிரஷ் கிடையாது… ஆனால் அது இருக்குது… நடிகை ராஷ்மிகா ஓபன் டாக்..!!

By Soundarya on கார்த்திகை 14, 2025

Spread the love

தென்னிந்திய சினிமாவில் நேஷனல் கிரஷ் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த சிக்கந்தர் திரைப்படம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைப் போலவே ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல், அல்லு அர்ஜுன் உடன் இணைந்த புஷ்பா 2, விக்கி கவுசல் உடன் இணைந்து சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த சாவா உள்ளிட்ட திரைப்படங்களில் ராஷ்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா இருந்து வருகின்றார். சினிமாவில் காலூன்ற பல ஆண்டுகள் ஆனாலும் தற்போது தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் மீது உள்ள அன்பு குறித்து நடிகை ராஷ்மிகா வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், “எனது அப்பா சிறு வயதிலில் இருந்தே பல தமிழ் படங்களைப் பார்ப்பார். அவர் ஒரு ரஜினிகாந்த் ரசிகர். நானும் ரஜினியின் ரசிகை தான். அதேபோல் விஜய் படங்களையும் நான் பார்ப்பேன். அப்போது   ஆச்சரியாகவும் இருக்கும். அவர் பெரிய சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் இருப்பார். அது எனக்கு ‘Crush’ மாதிரி இல்லை, அவர் மீது ஒரு பெரும் மரியாதை உள்ளது” என தெரிவித்துள்ளார்.