காதலனுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு ரகசிய ட்ரிப்.. இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவால் சிக்கிய நடிகை ராஷ்மிகா..

By Mahalakshmi on தை 16, 2024

Spread the love

திரை உலகில் தனது கியூட் ரியாக்ஷன் மூலம் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  இவர் தற்போது வியட்நாம் நாட்டிற்கு ட்ரிப் சென்ற லேட்டஸ்ட் போட்டோவை இன்ஸ்டாவில் அப்லோட் செய்து உள்ளார்.

   

நடிகை ராஸ்மிகா, நடிகர் விஜய்தேவர் கொண்டாவை காதலித்து வருகிறார் எனவும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் என்றும் தகவல்கள் வெளியாகி  வருகின்றன. இந்த நிலையில் இருவரும் இந்த தகவல்களை ஏற்கவும் இல்லை மறுப்பு கூறவும் இல்லை. இதனால் ராஷ்மிகா ரசிகர்கள் பெரும் குழப்பத்தில்  இருக்கிறார்கள்.

   

 

இந்த நேரத்தில் நடிகை ராஸ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியட்நாம் நாட்டிற்கு ட்ரிப் சென்றுள்ளதாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதில் அவர் தனியே எடுத்த  போட்டோக்களை மட்டுமே பதிவிட்டிருந்தார். இந்நிலையில் விஜய்தேவர் கொண்டாவும் அதே நாட்டிற்கு ட்ரிப் போன போட்டோக்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் வியட்நாம் நாட்டிற்கு ட்ரிப் சென்றுள்ளார்கள் என்ற தகவல்களை பரப்பி  வருகிறார்கள். இந்த தகவல்களை ரசிகர்களுக்கு இவர்கள் தனித்தனியே Instagram பக்கத்தில் வெளியிட்ட போட்டோக்கள் மூலம் ரகசியம் வெளியாகி ரசிகர்களுக்கு காட்டி கொடுத்து விட்டது.