நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகை இப்போம் எப்படி இருகாங்க தெரியுமா…? வைரலாக சமீபத்திய புகைப்படம்….

By Mahalakshmi on தை 16, 2024

Spread the love

1987 ல் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் “நாயகன்”.  இத்திரைப்படம் மும்பையில் தாதாவாக இருந்த  வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இத்திரைப்படத்தில் கமலுக்கு மகளாக நடிகை கார்த்திகா நடித்துள்ளார். இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

நடிகை கார்த்திகா ‘பூவிழி வாசலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் பெரும் வரவேற்பு பெற்றார்.இவர் நாயகன் படத்திற்கு அப்புறம் தமிழ் படங்கள் ஏதும்  நடிக்கவில்லை என்றாலும் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

   

 

நடிகை கார்த்திகா சுனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் சினிமா வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரின்  மகன்  திருமணத்தில் எடுத்த புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நாயகன் படத்தில் நடித்த கமலகாசன் மகளா  இது என்ற  ஆச்சிரியத்தில் அந்த புகைப்படத்தை வைரலாக்கி லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.