குடும்பங்கள் ஒன்றுகூடி கோலாகலமாய் நடந்து முடிந்த நடிகை ரம்யா பாண்டியன் தம்பியின் திருமணம்… வைரலாகும் வெட்டிங்க் போட்டோஸ்..!

By Soundarya on மாசி 2, 2025

Spread the love

ஆந்திரா மற்றும் கேரளாவை சேர்ந்த நடிகைகள் மட்டுமே அதிகம் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழகத்தை சேர்ந்த நடிகைகள் பல திரையுலகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். அதன்படி திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் சினிமாவில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

   

இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தாலும் அவருடைய உதவியை நாடாமல் தனியாக வாய்ப்பு தேடி தன்னுடைய முயற்சியில் வெற்றியும் கண்டார்.

   

 

இவர் ஜோக்கர் திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாகவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தும் அசத்தினார்.இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்ற போதும் ரம்யா பாண்டியனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து பட வாய்ப்பு பிடிக்க போட்டோ சூட் நடத்துவதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இதில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. தற்போது இவருக்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதற்கிடையில்சமீபத்தில் தான்  நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளர் லவல் தவான் என்பவரை திடீரென்று ஷிகேஷில் ஷிவ்புரி கங்கை நதிக்கரையில் திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில்  நடிகை ரம்யா பாண்டியனின் தம்பியான பரசு பாண்டியன் திருமணம் சில தினங்களுக்கு முன்பு கோலகமாக நடைபெற்ற நிலையில் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.