
CINEMA
காதலரை கரம் பிடித்த ‘செவ்வந்தி’ சீரியல் நடிகை…! சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம்..! wedding clicks…!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அப்படி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டது ‘செவ்வந்தி’ சீரியல். இந்த சீரியலில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கவுடா நடித்து வருகிறார். இதுமட்டுமின்றி அதே சன் டிவியில் ஒளிபரப்பான ‘அபியும் நானும்’ என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ரம்யா அந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்த நிலையில் அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலர் பார்கவ் என்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
மிக எளிய முறையில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்களது திருமணம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்பொழுது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரம்யா மற்றும் பார்கவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.