தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இன்றும் உள்ளது. தொடை அழகி ரம்பா என்று அனைவரும் அழைப்பார்கள்.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர். இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக இருந்த சமயத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா திருமணத்திற்கு பிறகு கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பிறகு இவர் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக சினிமாவிலிருந்து ரம்பா ஒதுங்கி இருக்கின்றார். இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ரம்பா தனது மகள் லான்யாவுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்.

தன்னுடைய குடும்பத்துடன் இலங்கை சுற்றுலா சென்றுள்ள நடிகை ரம்பா யாழ்ப்பாணம் கடற்கரையில் தனது கணவர், மகள்கள் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில் ரம்பா உடன் இருக்கும் அவருடைய மகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதில் நடிகை ரம்பாவின் மூத்த மகள் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை ரம்பா வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரம்பாவின் மகளா இவர், அழகில் அம்மாவையே மிஞ்சிடுவார் போலையே என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

