நடிகர் மயில்சாமியின் பிறந்தநாளுக்கு அன்னதானம் வழங்கிய ரோபோ சங்கர் குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ..!!

By admin on ஐப்பசி 3, 2024

Spread the love

பிரபல காமெடி நடிகரான மயில்சாமி சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். நான் அவன் இல்லை, தூள், கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் மயில்சாமிக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

   

முன்னணி நடிகர்களுடன் இணைந்து மயில்சாமி ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மயில்சாமி உயிரிழந்தார். சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய மயில்சாமிக்கு யுவன் மயில்சாமி என்ற ஒரு மகன் உள்ளார்.

   

 

ரோபோ சங்கர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோருடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். ரோபோ சங்கரின் மகள் இந்த ராஜாவுக்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் முதல் பிறந்தநாள்.. ரோபோ ஷங்கர் மகள் எப்படி கொண்டாடி  இருக்கிறார் பாருங்க - சினிஉலகம்

இந்திரஜா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கடந்து சில நாட்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் அறிவித்தார். இந்த நிலையில் பிரபல நடிகரான மயில்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரோபோ சங்கர் தனது குடும்பத்துடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். மேலும் அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.