Categories: சினிமா

12 வருஷமா எப்படா கல்யாணம் ஆகும்னு காத்துட்டு இருந்தன்.. என் அப்பா அம்மா அன்னைக்கு ஷாக் ஆயிட்டாங்க.. மனம் திறந்த நடிகை ரம்பா..

Spread the love

நடிகை ரம்பா கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திருமணமாகி கணவர், பிள்ளைகள் என செட்டிலான அவர், மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் அவர் பங்கேற்ற ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகையாக இருக்கும்போது என் கையில் பணம் இருக்காது. எல்லாவற்றையும் அம்மாவிடம் கொடுத்து விடுவேன். அம்மாவிடம் பணம் கேட்டால், எதற்கு என்று காரணம் கேட்பார்கள். அதனால் என் இஷ்டப்படி எந்த செலவுமே பண்ண முடியாது.

ஒருமுறை சிகாகோ சென்றிருந்த போது, காதலர் தினம் கொண்டாட்டம் நடந்தது. அங்கு விற்ற வேலன்டைஸ் டே கார்டு வாங்கிக்கொள்ள ஆசைப்பட்டேன். அதை அம்மாவிடம் சொல்லி எப்படியே வாங்கியும் வைத்துவிட்டேன். அதை என் வருங்கால கணவருக்கு காதலை வெளிப்படுத்தும்போது தர வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டேன். அந்த கார்டை வாங்கிய நான் என்னுடைய கப்போர்டில் ஒரு ரகசிய அறையில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டேன். ஒவ்வொரு ஆண்டும் அந்த கார்டை எடுத்து, என் எதிர்கால கணவருக்கு காதலர் தின வாழ்த்துகள் என்று அதில் எழுதி வைத்து விடுவேன். இப்படியே ஆண்டுகள் ஓடிப்போய் விட்டது.

#image_title

 

ஒரு கட்டத்தில் எனக்கு திருமணம் ஆகுமா, ஆகாதா, இப்படியே திருமணம் ஆகாமல் என் வாழ்க்கை போய் விடுமா என்று கூட சந்தேகமும் பயமும் வந்துவிட்டது. 1998 முதல், 2009 வரை 12 ஆண்டுகளாக அந்த கார்டில் வாழ்த்துகளை மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கிறேன். கல்யாணம் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லாமல் போய்விட்டது. அதற்கு பிறகுதான் எனது திருமணம் நிச்சயமானது. அப்போதுதான் காதலர் தினத்தன்று அந்த கார்டில் வாழ்த்துகள் எழுதி கொடுத்தேன்.

அந்த கார்டில் ஒருவரி தான் எழுத இடம் இருந்தது. அந்த வரியை மட்டுமே எழுதி கொடுக்க இடம் இருந்தது. அப்படி என் திருமணமே நடக்குமா, நடக்காத என 12 ஆண்டுகள் ஆன நிலையில்தான் எங்கள் திருமணம் நடந்தது என்று அந்த நேர்காணலில் ரம்பா கூறியிருக்கிறார். இந்த நேர்காணலின் போது ரம்பாவின் கணவரும் உடனிருந்தார்.

admin

Recent Posts

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

10 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

18 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

27 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

35 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

55 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

1 மணத்தியாலம் ago