Categories: சினிமா

ஒரு ரூபாய் செலவின்றி இலவசமாக செல்லலாம்.. மீண்டும் பொதுமக்களுக்கு உதவ களத்தில் இறங்கிய விஜய் டிவி பாலா..

Spread the love

விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களிடம் வரவேற்பு பெற்றார். வளர்ந்து வரும் நடிகராக சில படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக கஷ்டப்படும் மக்களுக்கு ஒடியோடி உதவும் இவரது தங்கமான குணத்தை பார்த்து, மக்கள் பாராட்டி வருகின்றனர். முதலில், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள மலைவாழ் கிராம மக்களுக்காக இலவசமான ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்த பணத்தில் வாங்கிக் கொடுத்து உதவினார்.

 

அடுத்து சென்னையில் கடந்த மாதத்தில் ஏற்பட்ட கனமழையால், வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை எடுத்து அவர்களுக்கு உதவினார் கேபிஒய் பாலா. அதாவது 340 குடும்பங்களுக்கு தலா ரூ. ஆயிரம் கொடுத்து உதவினார். மேலும் பல குடும்பங்களுக்கு பெட்ஷீட், பாய் தலையாணி, நைட்டீ, லுங்கி போன்றவற்றை வாங்கி தந்தார். இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. இதில் எந்த விளம்பரமும் எனக்கு தேவையில்லை என்றும் அவர் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இப்போது சென்னையில் பல்லாவரத்தை அடுத்துள்ள அழகாப்புதூர் பகுதியில் இலவச ஆட்டோ சேவை திட்டத்தை துவக்கி இருக்கிறார் பாலா. அதாவது அவரது சொந்த பணத்தில் ஒரு ஆட்டோவை வாங்கி விட்டிருக்கிறார். அந்த ஆட்டோவில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாிகள், வயதானவர்கள் என வசதியற்ற மக்கள் இலவசமாக பயணிக்கலாம். பல்லாவரம் பகுதியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல இந்த ஆட்டோவில் அவர்கள் இலவசமாக சென்று வரலாம். அந்த பகுதி மக்கள் பயனடையும் வகையில் இந்த ஏற்பாட்டை செய்து, இன்று முறை செயல்பாட்டுக்கும் வந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த பலரும் பாலாவை பாராட்டி வருகின்றனர்.

admin

Recent Posts

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

3 minutes ago

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

16 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

24 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

30 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

37 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

50 minutes ago