Like குறைந்தால் ஆடை குறைவதும் நிற்கும்… பெண்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து நடிகை ரக்ஷிதா ஆதங்கம்..!

By Soundarya on தை 4, 2025

Spread the love

சின்னத்திரை நடிகை கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து இளவரசி, சரவணன் மீனாட்சி, நொச்சிபுரம், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் ரச்சிதா நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஜாதா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ரச்சிதா அறிமுகம் ஆனார். தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரச்சிதா பிரபலமானார்.

   

கடந்த 2013-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.தற்போது ரங்கநாயகா என்ற கன்னட படத்தில் ரட்சிதா ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

   

 

தற்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை ரக்ஷிதா, “லைக் குறைந்தால் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ர்கள் ஆபாச வீடியோக்கள் போடுவது தானாக குறையும். நீங்க அவர்களை encourage பண்ணாதீங்க. அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஆபாச வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள்.

இதனால் சாலையில் செல்லும் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.  பெண்களின் ஆடை விஷயத்தால் பாலியல் குற்றங்கள் நடப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் தான் நடக்கிறது என்று சொல்வேன்” என்று கூறியுள்ளார்.