முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே தமிழில் முக்கிய ஹீரோவாக இருந்து வரும் நிலையில் தற்போது அவருடைய இளைய மகன் ஆகாஷ் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். அதன்படி ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள நேசிப்பாயா என்ற திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், அதர்வா மற்றும் முரளியின் மனைவியை ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் இந்த மேடையில் என் மாமனாருக்கு நன்றி சொல்லணும். எனக்கெல்லாம் வரு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். அப்போ விஜய் டிவில 4500 தான் சம்பளம் வாங்கிகிட்டு இருந்தேன். இப்போ தான் விஜய் டிவி வளர்ந்திருக்கு. பாலா போன்ற எல்லோருக்கும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்ங்க. நான் அந்த டைம்ல சினிமா துறையில நுழைய நினச்சப்போ என் மாமனார் எனக்கு சப்போர்ட் பண்ணினாரு. என் அப்பா இறந்த நேரம் அது. அவரு பொண்ணை எனக்கு கட்டி வச்சாரு. ஆனா லட்ச கணக்கில எங்கயாவது போயி வேலையை பாருன்னு சொல்லாம உன் கனவை நோக்கி போனு சொன்னாரு.
என் மாமாவுக்கு நான் எப்பவுமே நன்றி சொல்வேன்” என்று பேசியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கர இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்தவரும் எஸ்கே 23 படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் எஸ்கே 24 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன்புதான் சுதா கொங்கார இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 25 படத்தின் பூஜை போடப்பட்டது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் வெற்றி அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டுள்ளது. வசூலை பொருத்தவரை மட்டுமின்றி விமர்சனம் ரீதியாகவும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் கடுமையாக இந்த படத்திற்கு உழைத்துள்ளார். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் தான் தற்போது கிடைத்துள்ளது என்று சொல்லலாம்.