பிரபல நடிகருடன் காதல்… கோவாவில் நாளை ரகசியமாக திருமணம் செய்ய போகும் ‘கார்த்தி’ பட நடிகை… வெளியான ஷாக்கிங் தகவல்…

By Begam

Published on:

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் .

   

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் தயாரிப்பாளர் ஜாக்கி பக்நானி என்பவரை வரும் பிப்ரவரி 21ம் தேதி நாளை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களது திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இத்திருமணத்தில் அக்ஷய் குமார், டைகர் ஷரப், வித்யா பாலன், வருண் தவான்,  நட்டாஷா தலால், ரித்தேஷ் தேஷ்முக்,

வைஷாலி தேஷ்முக், ஷில்பா ஷெட்டி, ராஜ் குத்ரா, சையது கான், லட்சுமி மஞ்சு, ஈஷா தியோல் இவர்கள் மட்டுமின்றி இன்னும் பல திரைப்பிரபலங்களும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை ரகுல் ப்ரீத் மற்றும் அவரது காதலர் செய்ய இருக்கின்றனர். குறிப்பாக சுற்றுசூழலை கருத்தில் கொண்டு திருமணத்தில் பட்டாசு எதுவும் வெடிக்க கூடாது என தெரிவித்து இருக்கின்றனர்.

இதோடு மட்டுமின்றி Eco friendly wedding என்பதால் பத்திரிகை கூட அச்சடிகாமால் ஆன்லைனில் மட்டுமே எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்களாம். மேலும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு gluten free மற்றும் sugar free ஆக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by JACKKY BHAGNANI (@jackkybhagnani)

தற்பொழுது இவர்களின் திருமண விழா கோவாவில் தொடங்கியுள்ளது. எனவே இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by JACKKY BHAGNANI (@jackkybhagnani)