ஆனாலும் ராதா வசந்த ராஜனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடத்திற்குள் அவரை விட்டு பிரிந்து விட்டார். மேலும் தனது இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததாகவும் ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு அவரே அந்த புகாரை வாபஸ் செய்து விட்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு பைரவி சீரியலில் ராதா நடித்தார். பின்னர் பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் நடித்தார் அதன் பிறகு அவரை திரையில் பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், நான் சினிமாவில் இருந்து விலகி மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். எனக்கென்று சினிமாவில் ஒரு பெரிய மரியாதை இருந்தது. சின்னத்திரை பக்கம் சென்ற போது கூட சரிகமாவில் எனக்கு தனி ஒரு மதிப்பு கிடைத்தது. எனக்கு வேண்டியது எல்லாம் கொடுத்து என்னை ஒரு தனி இடத்தில் தான் வைத்திருந்தார்கள்.
என் கேரியரில் நான் யாரையும் குறை சொல்ல முடியாது. நான் சினிமாவில் இருந்து விலகி திருமணம் பக்கம் சென்றது தான் மிகப்பெரிய தவறு. அதை நான் இப்போது நன்றாகவே புரிந்து கொண்டேன். அப்போது சினிமாவில் இருந்து விலகி விட்டேன். ஆனால் இப்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்து விட்டது. அந்த வழியில் நான் செல்ல விரும்புகிறேன் என்று ராதா சினிமா பற்றி கூறியுள்ளார்.