ஆர் ஜே வாக இருந்த பாலாஜி சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். நானும் ரௌடி தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இதனை தொடர்ந்து எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனை தொடர்ந்து கேரக்டர் நூல்களை விட ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அதன்படி அவருடைய இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீட்டுல விசேஷம் என்ற திரைப்படத்தையும் அவரே இயக்கியிருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனி ஒரு அங்கீகாரத்தை பெற்றார். இறுதியாக இவருடைய நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது என கூறலாம். இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் 45 வது திரைப்படத்தை இவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் அரவிந்த் சாமியுடன் நடந்த ஒரு சந்திப்பை பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். அதில், நான் ஒரு நாள் அரவிந்த்சாமி சாரை பார்க்கும்போது அவர் என் கையில் இருக்கும் வாட்சைப் பார்த்து, ரொம்ப நல்லா இருக்கு இது மாதிரி அதிகமா நீங்க கலெக்ட் பண்ணி வச்சிட்டீங்களா என்ற என்கிட்ட கேட்டார். ஆமா சார் எனக்கு வாட்ச் கலெக்ஷன் ரொம்பவும் பிடிக்கும் என்று அவரிடம் கூறினேன். உடனே அவர் ஒரு வார்த்தையை கூறினார்.
அதாவது, ஒரே ஒரு வேலையை மட்டும் செய்யும் கருவிக்காக இவ்வளவு செலவிடுவது வேஸ்ட் என எனக்கு தோன்றியது, உங்கள மாதிரி தான் நானும் அதிகமா கலெக்ட் பண்ணி வச்சுப்பேன், அதுக்கப்புறம் அது வேஸ்ட் என்று தோணுச்சு நான் விட்டுட்டேன் என்று கூறினார். அதை கேட்டதும் எனக்கே ஆச்சரியமா இருந்துச்சு. பின்னர் நேரத்தை மட்டும் காட்டும் ஒரு கருவிக்காக இப்படி செலவிட வேண்டுமா என்று தோணுச்சு. அதுக்கப்புறம் நான் யார் கிட்டயும் எதுவுமே வாங்குவதில்லை. என்கிட்ட இருந்த வாட்ச் கலெக்ஷன் எல்லாத்தையும் என் நண்பர்களுக்கு கிப்ட்டா கூட நான் கொடுத்துட்டேன். முதலில் ஒரு படத்தை முடித்துவிட்டு இறுதியாக வாட்ச் கிப்டாக வாங்கி வந்த நான் சில காலம் அதை அப்படியே விட்டுவிட்டேன் என்று ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளார்.