நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் கேரளா மற்றும் கரூர் பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வழக்கில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பணகுடியைச் சேர்ந்த விவேக் ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய இரு இளைஞர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் காஷிமீரா பகுதியில், இந்தி சீரியல்கள் மற்றும் வெப் தொடர்களில் வாய்ப்புத் தேடும் பெண்களைக் குறிவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் இயங்கி வருவதாகப் புகார் எழுந்தது. ‘எக்ஸோடஸ் ரோடு இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பின் உதவியுடன், போலீசார் சாதாரண வாடிக்கையாளர்கள் போல மாறுவேடத்தில் மிரா-பயந்தர் சாலையில் உள்ள விடுதிக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, பிரபல இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் 35 வயது நடிகை ஒருவர் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார். மேலும், சத்தீஸ்கரைச் சேர்ந்த தபசும் என்ற சோனியா உமர் குரேஷி என்ற பெண், வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமானது. இச்சம்பவத்தில் கைதான தபசும் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி ரமேஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபச்சார வலையிலிருந்து மீட்கப்பட்ட இந்தி சீரியல் நடிகை, மும்பை காந்திவலியில் உள்ள ரெஸ்க்யூ ஃபவுண்டேஷன் காப்பகத்தில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளார். இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும், இதன் பின்னணியில் உள்ள வலைப்பின்னல் குறித்த விரிவான விசாரணையையும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…