தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதைத் தொடர்ந்து அவர் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் நடிகையாக அறிமுகமானார்.

இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் நடித்தார். தற்பொழுது இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கோலிவுட்டில் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் கைவசம், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் 2 படம் என எண்ணற்ற படங்கள் உள்ளன.

இவர் தற்பொழுது தல அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்தே ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வப்போது இவர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தனது காதலருடன் நடிகை பிரியா பவானி ஷங்கர் தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். சேலையில் அப்படியே பார்ப்பதற்கு தேவதை போல இருக்கும் அவரை பார்த்த ரசிகர்கள் ‘யாரு கல்யாண பொன்னுன்னே தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

