தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். முதலில் இவர் செய்தி வாசிப்பாளராக தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியலில் நடித்து புகழ்பெற்றதன் மூலம் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன்படி முதன் முதலாக மேயாத மான் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ருத்ரன், திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடித்த டிமான்டி காலனி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் டெப்பி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றார். இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், ஒரு படத்தை எடுப்பதற்கு முன்பு புரொடியூசர் கதையை கேட்டுவிட்டு தான் அதில் பணம் போடுகிறார். ஆனால் செட்டுக்கு சென்ற பிறகு அங்கு எல்லாமே மாறுகிறது. முதலில் ஒவ்வொன்றாக தொடங்கி பிறகு யாருடைய பிடியிலும் இல்லாமல் எல்லாமே மாறும்போது என்ன செய்தாலும் அந்த படம் ஹிட் ஆகாது. அப்படி நமக்கு தோன்றினால் அந்த படத்தில் கமிட் ஆகி விட்டு திடீரென நாம் வெளியேற முடியாது. அதில் நடித்துவிட்டு இது ஒரு நமக்கு அனுபவம் என்று நினைத்துக் கொண்டுதான் அமர்ந்து செல்ல வேண்டும். யாராக இருந்தாலும் இதை தான் யோசிப்பார்கள். ஒரு படம் எடுப்பதற்கு முன்பு சரியான திட்டமிடல் இருக்க வேண்டும் என்று பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…