#image_title
நடிகை ப்ரணிதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் பலருக்கும் பரீட்சியமானவர் ப்ரணிதா. 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த உதயம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து கார்த்திகின் அண்ணனான சூர்யாவுடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு மாஸ் என்கிற மாசிலாமணி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். பின்னர் அதர்வா நடிப்பில் வெளிவந்த ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடிக்க தொடங்கினார்.
பின்னர் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் நித்தின் ராஜுவை கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருந்த இவர் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் மீண்டும் உடல் எடையை குறைத்து சினிமாவில் நடித்து வந்த இவர் தற்போது இரண்டாவது கர்ப்பமாக இருக்கின்றார்.
இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு இரண்டாவது சுற்று என்று கேப்சன் உடன் வெளியிட்டு இருக்கின்றார், இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…