நான் ஒன்னும் பணக்கார குடும்பம் எல்லாம் இல்ல.. 12 வயசுலையே நடிப்பு பக்கம் திரும்பிட்டேன்.. மனம் திறந்த நடிகை பத்மபிரியா..!

By Nanthini on பங்குனி 23, 2025

Spread the love

நடிகை பத்மபிரியா தமிழ் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருபவர்.  தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து இவர் தமிழில் குறைவாகவே படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகையான பத்மப்ரியா தமிழில் தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே, பட்டியல், மிருகம் பொக்கிஷம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதை செய்யாததால் தான் நான் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டேன்.! பத்மப்ரியா அதிர்ச்சி தகவல்..! - Tamil Behind Talkies

   

 

   

 

 

இந்நிலையில் பத்மபிரியா சமீபத்தில் அளித்த பேட்டியில், பெண்களுக்கு என்று எதற்கு தனியாக பவுண்டரி செட் பண்ண வேண்டும். நாம பிறக்கும்போது பௌண்டரியோட தான் பொறந்தோமா. இந்த சமூகத்தில் தான் சிலர் பெண்களுக்கென தனி ஒரு பவுண்டரி வெச்சிருக்காங்க. நான் 12 வயசுலயே நடிப்புக்கு வந்துட்டேன். ஸ்காலர்ஷிப் முலம்ன் தான் படிப்ப முடிச்சேன். நான் அந்த அளவுக்கு ரிச்சான பேமிலி எல்லாம் கிடையாது. சாதாரண நடுத்தர குடும்பம் தான். எங்க அப்பா ஆர்மில இருந்த சமயத்துல 20 வயசுல கல்யாணம் பண்ணிட்டு வந்தா எங்க அம்மா ஏழு வருஷம் வரைக்கும் தனியா தான் இருந்தாங்க.

Padmapriya On Husband Jasmine Shah: “He Is Hot… I Was Mentally Married To Him…” | TimelineDaily

 

அப்போ எங்க அம்மா ஒரு பௌண்டரியை தனக்குள்ள அமைச்சுக்கிட்டாங்க. நான் சின்ன வயசுல படிச்சிட்டு இருக்கும்போதே நடிப்பு எனக்கு முக்கியமாக தெரிஞ்சுச்சு. நீ யார் தல ரெண்டு வருஷம் டிகிரி படிக்க போயிட்டேன். படிச்சிட்டு இருக்கும்போதே எனக்குள்ள லவ் செட் ஆகி அப்படியே திருமணமும் நடந்திருச்சு. அதன் பிறகு டெல்லியில் இரண்டு வருடம் ஒரு பைனான்ஸ் கம்பெனியில் தான் வேலை பார்த்தேன். பிறகுதான் இருக்கிறது ஒரு லைப் நம்மளோட கேரியர நாம தான் பாத்துக்கணும் என்பதற்காக சினிமாவில் நடிக்க வந்தேன் என்று பத்மபிரியா பேசியுள்ளார்.