தமிழ் சினிமாவில் பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. 1980களில் தொடங்கி 90களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தார். தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ், பாக்கியராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகை ஊர்வசி பிரபல மலையாள நடிகர் ஆன மனோஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு குஞ்சட்டா என்கின்ற மகள் இருக்கிறார். அதன் பிறகு ஊர்வசி வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். மகள் குஞ்சட்டா தற்போது தாய், தந்தை என இருவருடனும் மாறி மாறி வசித்து வருகிறார்.

தற்போது ஊர்வசிக்கு 50 வயது ஆகும் நிலையில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகள் குஞ்சட்டா உடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவார். இதன் மூலம் விரைவில் ஊர்வசியின் மகள் சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். தனது மகள் குஞ்சட்டாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்த சில இயக்குனர்களும் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

அவர் நடிப்பாரா இல்லையா என்பது விரைவில் தெரியவரும். இதற்கிடையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஊர்வசி தான் நடிக்கும் காலத்தில் தனது அம்மா, பாட்டி என அனைவரிடமும் இருந்து தற்போது வரை ஒரு துணை இல்லாமல் இருக்க முடியவில்லை. ஆனால் தனது மகளை நான் அப்படி வளர்க்க விரும்பவில்லை. அவள் எதுவாக இருந்தாலும் தனியாக நின்று சமாளிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் என்று தெரிவித்து இருக்கின்றார்.
