சேலையில் செதுக்கிவச்ச சிலைபோல அழகாக இருக்கும் நடிகை தேவதர்ஷினியின் மகள்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

By Begam on மாசி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தேவதர்ஷினி. ‘கனவுகள் இலவசம்’ என்ற சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவர் ‘பார்த்திபன் கனவு ‘என்ற திரைப்படத்தில் நடித்து கலக்கி இருந்தார்.

   

இதைத்தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 18 ,அழகிய நீயே, சரவணா, தீபாவளி ,கிரீடம், வேல், சரோஜா,கண்ணா லட்டு தின்ன ஆசையா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருடன் நடித்த சக நடிகரான சேத்தன் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

   

 

திருமணத்திற்கு பிறகு கணவர் சம்மதத்துடன் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த காஞ்சனா 2 & 3, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற அனைத்து படங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது. இது போக விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை, ஷோவில் நடுவராக பங்கேற்று வருகிறார். தேவதர்ஷினி சேத்தன் தம்பதியினரின் மகள் நியதி. இவரும் தற்பொழுது ஹீரோயினாக களமிறங்கி கலக்கி வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நியதி. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.தற்பொழுது இவர் சேலையை மாடர்ன் லுக்கில் அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.