சினிமாவையும் குடும்பத்தையும் ஒண்ணா சேர்த்தா இதான் நிலைமை.. மாமியாரால் சிக்கலில் சிக்கி விழி பிதுங்கி நிக்கும் ஜெயம்ரவி..

By Sumathi

Updated on:

நடிகர் ஜெயம் ரவி நடித்த படங்கள் எதுவுமே சில ஆண்டுகளாக சரியாக போகவில்லை. பொன்னியின் செல்வன் நன்றாக வரவேற்கப்பட்டாலும் 3 ஹீரோக்களில் ஒருவராக ஜெயம் ரவி நடித்திருந்தார். அவர் எதிர்பார்த்த இறைவன் படமும், அகிலன் படமும் மிகப்பெரிய பிளாப் படங்களாக அமைந்தன. இதையடுத்து சைரன் 108 என்ற படத்தை தான் அவர் நம்பி இருக்கிறார். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

   

இந்நிலையில் இந்த படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிட இருந்தது. தேர்தல் நேரத்தில் எதற்கு பிரச்னை என, அவரது நிறுவனம் சார்ந்த செண்பகமூர்த்தி என்பவரது சொந்த தயாரிப்பு பேனரில் அந்த படத்தை வெளியிட முடிவானது. ரெட் ஜெயிண்ட் மூவிஸை பொருத்த வரை, ஒரு படத்தை வாங்கி வெளியிட்டு அதில் வரும் லாபத்தில் தங்களது கமிஷனை மட்டும் எடுத்துக்கொண்டு,

மீதி பெரும்தொகையை தந்துவிடுவார்கள். இதற்கு பெயர் ப்ரீ டிஸ்ட்ரிப்யூசன். அந்த அடிப்படையில் சைரன் 108 படத்தை கேட்ட போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், அதாவது ஜெயம் ரவியின் மாமியார், அப்படி தர முடியாது. எங்களுக்கு ரூ. 15 கோடி அட்வான்ஸ் கொடுங்கள், நிறைய கமிட்மென்ட்ஸ் உள்ளது என்று கேட்டிருக்கிறார்.

அப்படி ஒரு வழக்கமே எங்கள் நிறுவனத்தில் இல்லை. என்றாலும் 10 கோடி ரூபாய் முன்பணமாக தருகிறோம் என ஒத்துக்கொண்ட செண்பகமூர்த்தி, ஒரு புதிய கண்டிசன் போட்டிருக்கிறார். அதாவது சைரன் 108 படம் வெற்றிக்கரமாக ஓடிவிட்டால் பரவாயில்லை. அப்படி ஏதாவது ஓடாமல் சில கோடிகள் நஷ்டம் ஏற்படும் பட்சத்தில், ஜெயம் ரவி இப்போது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நடிக்க அவருக்கு 18 கோடி ரூபாய் சமபளம் பேசப்பட்டு, 7 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மீதி எங்களது தரப்பில் 11 கோடி ரூபாய் தர வேண்டும். அதனால் அந்த 11 கோடியில் நீங்கள் வாங்கும் பணத்தில் ஏற்படும் நஷ்டத்தை கழித்துக்கொள்கிறோம் என கூறியிருக்கிறார். இது என்னடா வம்பாக போகிறது. மாமியார் வாங்கிய பணத்துக்கு, மருமகன் சம்பளத்தில் பிடித்தம் செய்வதா என குழப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்பமும், சினிமாவும் ஒன்றாக இருப்பதால், மாமியார் வாங்கும் பணத்துக்கு, தனது சம்பளத்தில் பிடித்தமா, இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் ஜெயம் ரவி சிக்கியிருக்கிறார்.

author avatar
Sumathi