Connect with us

Tamizhanmedia.net

35 வயதில் திருமணத்திற்கு ரெடியான நித்யா மேனன்… விரைவில் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா…???

CINEMA

35 வயதில் திருமணத்திற்கு ரெடியான நித்யா மேனன்… விரைவில் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா…???

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்யா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த அசத்தியிருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் 35 வயதாகும் நித்யா மேனனை திருமணம் செய்து கொள்ளும்படி அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தி வருகின்றன. பெங்களூரை சேர்ந்த தொழிலதிபருடன் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக ஏற்கனவே தகவல் பரவிய நிலையில் அதனை நித்யா மேனன் மறுத்துவிட்டார்.

தற்போது மீண்டும் அவரின் திருமணம் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தன்னுடைய சிறுவயது நண்பரை நித்யா மேனன் காதலித்து வருவதாகவும் அந்த நண்பர் மலையாள திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் நித்யா மேனன் விரைவில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

More in CINEMA

To Top