தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
சமீபத்தில் நடிகர் அஜித் நார்வே நாட்டில் அவருடைய நண்பர்களுடன் இணைந்து பைக்கில் சுற்றிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகின. இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் அஜித் சென்னைக்கு வந்துள்ளார். இன்று அதிகாலை அஜித் சென்னை விமான நிலையம் வந்தபோது அங்கு அவரைக் காண காத்திருந்த ரசிகர்கள் சிலர் செல்பி எடுக்க சென்றனர்.
நின்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் அஜித் அவர்களுக்கு போஸ் எதுவும் கொடுக்காமல் விறுவிறுவென நடந்து சென்றார். இருப்பினும் அவரை விடாத ரசிகர்கள் விரட்டி சென்று புகைப்படம் எடுக்க முயன்றனர். சில நிமிடங்களில் அங்கு ஏராளமான ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
Thala Ajith Kumar spotted on Chennai airport earlier today#Ajith#Thala#AjithKumarpic.twitter.com/V4uftXNfiq
— Vakugu (@vakugu) August 24, 2023