தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழும் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சரோஜா. இந்தத் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, காஜல் அகர்வால், பிரேம்ஜி, வைபவ், எஸ் பி சரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.

யுவன் இசையில் உருவான இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற கோடான கோடி பாடல் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடல் மூலம் பிரபலமானவர்தான் நடிகை நிகிதா.

அவர் தமிழில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்த நிலையில் மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கோடான கோடி பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகிதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.
Good morning. ???? pic.twitter.com/6G6Mh9suOS
— Nikita thukral (@thukralnikita) July 25, 2023
