சிகப்பு நிற டி-ஷர்ட்… ஸ்டைலிஷ் லுக்கில் சென்னை திரும்பிய நடிகர் அஜித்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

By Nanthini on ஆடி 26, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் தான் நடிகர் அஜித். இவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதல் மற்றும் பைக் ரேஸ் சொல்லிட்டா பல விளையாட்டு தொடர்பான செயல்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

   

அடிக்கடி தனது பைக்கில் சுற்றுலா என்ற பெயரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நேபாளம் நாட்டிற்கு உலக டூர் சுற்றுலா சென்று இருந்தார்.

   

 

இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்க உள்ள நிலையில் அனிருத் இசை அமைக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில் அஜித் கடந்த சில நாட்களாக வெளிநாட்டு சுற்றுலா பயணத்தில் இருந்த நிலையில் தற்போது அவர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் ஸ்டைலிஷ் லுக்கில் வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் சிலருடன் அஜித் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.