பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நடிகை நஸ்ரியா தம்பியின் திருமண நிச்சயதார்த்தம்… அவரும் ஒரு நடிகர் தான்..!

By Soundarya on மார்கழி 5, 2024

Spread the love

மலையாள சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை நஸ்ரியா, இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த நேரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனது சுட்டித்தனமான நடிப்பாலும் இளமையான தோற்றத்தாலும் நடித்த முதல் படத்திலேயே பலரது மனதை கொள்ளை கொண்டார்.

   

இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தார்.

   

#image_title

 

நடிகை நஸ்ரியா நசீம் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர் ஆவார். நடிகை நஸ்ரியா நசீம் தமிழில் திருமணம் என்னும் நிக்காஹ்,வாயை மூடி பேசவும்,கதை திரைக்கதை வசனம் இயக்கம், ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.  தனது க்யூட்டான எக்ஸ்பிரஷன் மூலமாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் டாப் நடிகையாக வலம் வந்தார்.

பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட நஸ்ரியா பின்னர் சில ஆண்டுகள் கழித்து நானி உடன் அடடே சுந்தரா என்ற திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

#image_title

நஸ்ரியாவின் தம்பி நவீன் நஜிமின் ஆவார். இந்நிலையில் நஸ்ரியா தம்பிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் நவீன் நஜிம் மலையாள திரைப்படத் துறையில் அம்பிலி என்ற பிரபலமான திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.