மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். தமிழில் மாயக்கண்ணாடி என்ற படத்தில் சேரனுக்கு ஜோடியாக நாயகியாக நடித்திருந்தார். தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பாசக்கிளிகள் அமிர்தம் அழகிய தீயே உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்திருந்தார். தற்போது பாதி இராத்திரி என்ற மலையாள படத்தில் அவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை நவ்யா நாயர் கூறியதாவது, எனக்கு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் ஆசை உள்ளது. சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அந்த ஆசை கைகூடவில்லை. குடும்பம் நடனம் ஸ்கிரிப்ட் படிப்பது என பல வேலைகள் இருப்பதால் படம் இயக்க முடியவில்லை. முன்பே ஒரு ஸ்கிரிப்ட் ரெடியாக வைத்திருந்தேன். அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். விரைவில் ஒரு படத்தை இயக்குவேன் என்று நம்புகிறேன் என்று நவ்யா நாயர் கூறியிருக்கிறார்.
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…
அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…