நடிகை மிருணாளினி ரவி டிக் டாக் செயலி மூலம் பிரபலமானார். இதனை அடுத்து இயக்குனர் தியாகராஜன் குமாரசாமி ஆடிஷன் மூலம் மிருணாளினி ரவியை சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளார்.
அந்த திரைப்படத்தில் சேட்டு என்ற ஏலியன் பெண் கதாபாத்ரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார். இதனை அடுத்து சாம்பியன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
இதனை தொடர்ந்து எனிமி, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட திரைப்படங்களில் மிருணாளினி ரவி நடித்துள்ளார். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் நடித்த படங்கள் குறைவாக இருந்தாலும் ரசிகர்களிடையே மிருணாளினி ரவிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மிருணாளினி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய வீட்டின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதன் கேப்ஷனில் பெங்களூரில் சொந்தமாக வீடு கட்டி இருக்கிறேன். அந்த வீட்டிற்கு எனது அம்மாவின் பெயரான மொழி என்பதை புது இல்லத்தின் பெயராக வைத்திருக்கிறேன். உங்களது ஆதரவு இல்லாமல் எனது கனவு நினைவாக வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என பூஜை தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.