Actress Mohini

நான் ஏஆர் ரகுமானை வெறித்தனமாக காதலித்தேன்… அதுதான் என் திருமணத்தை தடுத்து விட்டது – பிரபல நடிகை சொன்ன சீக்ரெட்!

By Elango on மாசி 27, 2026

Spread the love

கடந்த 1990களில் வெளியான ஈரமான ரோஜாவே நாடோடி பாட்டுக்காரன் கண்மணி நான் பேச நினைப்பதெல்லாம் புதிய மன்னர்கள் பட்டுக்கோட்டை பெரியப்பா வனஜா கிரிஜா போன்ற பல படங்களில் நாயகியாக நடித்தவர் மோகினி. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னட மொழி படங்களிலும் நிறைய நடித்திருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை மோகினி கூறியதாவது, நான் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் தீவிரமான ரசிகை. அவர் மீது வெறித்தனமான அன்பு என்றும் சொல்லலாம். அவர் இஸ்லாமுக்கு மாறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். அவர் மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் எனக்கு அவரை பிடித்திருக்கிறது, திருமணம் செய்து வையுங்கள் என்று சொல்வதற்கு வசதியாக இருந்திருக்கும் என்று அதில் நடிகை மோகினி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.