Connect with us

அவங்க வீட்ல ஒத்துக்கல, கொசு மருந்த குடிச்சிட்டேன்.. 2-வது திருமணம் குறித்து எமோஷனலாக பேசிய மின்னல் தீபா..!

CINEMA

அவங்க வீட்ல ஒத்துக்கல, கொசு மருந்த குடிச்சிட்டேன்.. 2-வது திருமணம் குறித்து எமோஷனலாக பேசிய மின்னல் தீபா..!

நடிகை மின்னல் தீபா தனது இரண்டாவது திருமணம் குறித்தும் அதில் நடந்த பிரச்சனைகள் குறித்தும் பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் மின்னல் தீபா. அதிலும் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி திரைப்படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் போது வாமா மின்னல் என்ற டயலாக் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அன்று முதல் மின்னல் தீபா என்று அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் ஒரு முன்னணி நடிகையாக இவரால் வர முடியவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் வந்த இவர் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் பூங்கொடி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்ற சீரியலில் மாலதி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

   

 

தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை தீபா கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி சுப்பிரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா காரணமாக மிக எளிமையாக தீபாவின் வீட்டில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு திருமணத்தை அறிவித்திருந்தார்.

இவருக்கு இது முதல் திருமணம் கிடையாது. இரண்டாவது திருமணம் ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒன்பது ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு தான் சுப்ரமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக வாழ்ந்து வரும் தீபா சமீபத்தில் தனது கணவருடன் பேட்டி அளித்திருந்தார்.

அதில் அவர் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது “இவரை முதன் முதலில் பார்த்தவுடனே எனக்கு பிடித்து விட்டது. பின்னர் இருவரும் பேசிப் பழக்க தொடங்க காதலிக்க ஆரம்பித்து விட்டோம். நாங்கள் பழக ஆரம்பித்த முதல் நாளிலேயே என் வாழ்வில் நடந்த முதல் திருமணம் குறித்தும் தனது முதல் கணவர் குறித்தும் அனைத்து விஷயங்களையும் கூறிவிட்டேன்.

பின்பு வேறு யாராவது கூறி தெரிவதற்குள் நானே சொல்லிவிடுவது மேல் என்று எண்ணினேன். மேலும் எங்களது திருமணத்திற்கு முதலில் அவர் வீட்டுத் தரப்பில் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு இது முதல் திருமணம், எனக்கு தான் இரண்டாவது திருமணம். அதனால் அவர்கள் யாருமே ஒத்துக்கவில்லை. பின்னர் எப்படியோ பேசி சமாதானம் செய்தார். அதற்கு பிறகு இருவருக்கும் சிறு மனக்கசப்பு வந்த போது இவர் என்னை விட்டு சென்று விடுவாரோ என்ற பயத்தில் கொசு மருந்தை எடுத்து குடித்து விட்டேன்.

பிறகுதான் இருவரும் திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் எனது தாயார் இவரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று பிரச்சினை செய்ய தொடங்கி விட்டார். அப்போது அவர் மனதளவில் சற்று பாதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே எனது முதல் திருமணம் பாதியிலேயே முடிந்து விட்டது. இரண்டாவது திருமணமும் அப்படி ஆகிவிடுமோ? என்ற பயத்தில் திருமணம் வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். அதெல்லாம் எனக்கு மறக்கவே முடியாது என்று பேசி இருந்தார் மின்னல் தீபா.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top