#image_title
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து மீனா நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.
நடிகை மீனா விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை இன்றும் ரசிகர்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. யாராக இருந்தாலும் உதவும் மனப்பான்மை கொண்டவர் விஜயகாந்த். தனது வீட்டிற்கு வருபவர்களாக இருந்தாலும் சரி தான் சந்திக்கும் நபராக இருந்தாலும் சரி பசியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.
ஆரம்பத்தில் தான் சினிமா வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை நினைத்து வருந்திய விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்த பிறகு மற்ற யாரும் அந்த கஷ்டங்களை படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். மீனாவும், விஜயகாந்தும் இணைந்து வானத்தை போல, பெரியண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்தனர். இந்நிலையில் நடிகை மீனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, நடிகர் விஜயகாந்த் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்.
அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்த பிறகும் அவரது கிராமிய மனம் மாறவே இல்ல. அவரோட பேச்சில், செயலில் அது தெரியும். யாரும் வெறும் வயித்தோட போகக்கூடாது என்று நினைக்கிற ஒரு ஆளு. எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போடுவாரு. எனக்கு அயிரை மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். அது அவருக்கு தெரியும். எனக்காக மதுரையிலிருந்து Flight-ல அயிரை மீன் குழம்பு எடுத்துட்டு வந்தாரு. அவரு ரொம்ப அருமையான மனிதர் என கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…
'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…
விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…