அந்த விஷயம் மட்டும் மாறல.. எனக்கு புடிச்ச குழம்பை Flight-ல எடுத்துட்டு வந்தாரு.. கேப்டன் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை மீனா..!!

By admin on ஆனி 25, 2024

Spread the love

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனா. இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், அஜித், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து மீனா நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போது வரை ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார்.

Actress Meena reply to fan | tamil cinema news | latest news

   

நடிகை மீனா விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவை இன்றும் ரசிகர்களால் நினைத்து பார்க்க முடியவில்லை. யாராக இருந்தாலும் உதவும் மனப்பான்மை கொண்டவர் விஜயகாந்த். தனது வீட்டிற்கு வருபவர்களாக இருந்தாலும் சரி தான் சந்திக்கும் நபராக இருந்தாலும் சரி பசியாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

   

மீனா என் தேவதை в X: „#HBDVijayakanth #மீனா என் தேவதை 😍😘❤ #Meena  https://t.co/QaYAFntmni“ / X

 

ஆரம்பத்தில் தான் சினிமா வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை நினைத்து வருந்திய விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்த பிறகு மற்ற யாரும் அந்த கஷ்டங்களை படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டினார். மீனாவும், விஜயகாந்தும்  இணைந்து வானத்தை போல, பெரியண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்தனர். இந்நிலையில் நடிகை மீனா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, நடிகர் விஜயகாந்த் அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்.

விஜயகாந்தும் மீனாவும் டிரெண்டிங்!.. இப்போ அப்படியொரு வேலையை பார்த்த ஏவிஎம்  நிறுவனம்!.. - CineReporters

அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்த பிறகும் அவரது கிராமிய மனம் மாறவே இல்ல. அவரோட பேச்சில், செயலில் அது தெரியும். யாரும் வெறும் வயித்தோட போகக்கூடாது என்று நினைக்கிற ஒரு ஆளு. எல்லாருக்கும் நல்ல சாப்பாடு போடுவாரு. எனக்கு அயிரை மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும். அது அவருக்கு தெரியும். எனக்காக மதுரையிலிருந்து Flight-ல அயிரை மீன் குழம்பு எடுத்துட்டு வந்தாரு. அவரு ரொம்ப அருமையான மனிதர் என கூறியுள்ளார்.

Latest News on Vijayakanth: Get Vijayakanth News Updates along with Photos,  Videos and Latest News Headlines | The Indian Express