Categories: சினிமா

தளபதி விஜயின் சூப்பர் ஹிட் பாடல்.. முதலில் பார்த்து பாராட்டிய தல அஜித்.. பலரும் அறியாத தகவலை பகிர்ந்த இயக்குனர்..!!

Spread the love

ஏ.எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் எனது 2013-ஆம் ஆண்டு தலைவா படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்தார். இந்த படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்தார். மேலும் சத்யராஜ் மலையாள நடிகர் ராஜு பிள்ளை ஆகியோர் தலைவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இதற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தலைவா படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மக்களிடையே பிரபலமானது. இந்நிலையில் இயக்குனர் ஏ.எல் விஜய் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தலைவா படத்தில் இடம்பெற்ற வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை முதலில் பார்த்தது தல அஜித் சார் தானா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஏ.எல் விஜய் ஆமாம். தலைவா படத்தின் ஷூட்டிங் நடந்தபோது அஜித் ஆரம்பம் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

 

இதனால் நானும் அஜித்தும் ஒரே ஹோட்டலில் தங்கி இருந்தோம். அவர் என்னை அழைத்து வரச் சொன்னதாக கூறினார்கள். நான் அவரது அறைக்கு சென்றேன். அஜித் எனக்கு சாம்பார் சாதம் செய்து கொடுத்தார். எனது அசிஸ்டெண்டுகளுக்கும் கொடுத்தார். அப்போது தலைவா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலையும் காண்பித்தேன். அதனை பார்த்ததும் அஜித் இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும்.

நீங்க வேணா பாருங்க அப்படின்னு சொன்னார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அருமையாக இருப்பதாக என்னை பாராட்டினார். வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை முதலில் பாராட்டியது அஜித் சார் தான். மேலும் அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் துபாயில் சந்தித்துக் கொண்ட போது படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். என்னை சந்தித்து பேசிய விஷயத்தையும் அஜித் விஜய்யிடம் கூறியுள்ளார். இருவரும் நல்ல மனிதர்கள் என ஏ.எல் விஜய் சந்தோசமான அனுபவங்களை பகிர்ந்தார்.

admin

Recent Posts

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

2 minutes ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

20 minutes ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

29 minutes ago

பகீர்.! வானில் பற்றிய தீ… தரை இறங்கியபோது நேர்ந்த கோர விபத்து!” – 277 பயணிகளுடன் வந்த துர்க்கி ஏர்லைன்ஸ் விமானத்திற்கு நேர்ந்த கதி..!

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ…

38 minutes ago

BIG BREAKING: போட்டியின்றி சபாநாயகராக தேர்வானார் ஜே.சி.டி. பிரபாகர்..!!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல்…

47 minutes ago

வெட்கமே இல்லையா? கண்ணாடியைப் பார்த்தாவது திருந்துங்க.. மைசூரு மாநகராட்சியின் நூதன முயற்சியை மதிக்காத நபர்… வைரலாகும் பகீர் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் மைசூருவில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட ஒரு நூதன முயற்சி தற்போது…

50 minutes ago