கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1992-ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் ரேவதி பஞ்சவர்ணம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் கதை மற்றும் திரை கதையை 7 நாட்களுக்குள் எழுதி முடித்துள்ளார். தேவர் மகன் திரைப்படத்தின் முதலில் கதாநாயகியாக நடிக்க தேர்வானது ரேவதி இல்லையாம்.
பிரபல நடிகையான மீனாவை தான் முதலில் பஞ்சவர்ணம் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர். அவரும் நான்கு நாட்கள் ஷூட்டிங் வந்துள்ளார். அவருக்கு மேக்கப் போட்டு நடிக்க வைத்துள்ளனர். ஆனால் கிராமத்து பெண் கதாபாத்திரத்திற்கு மீனா சரியாக பொருந்தவில்லை என்பதால் அவருக்கு பதிலாக பட குழு நடிகை ரேவதியை தேர்வு செய்துள்ளனர்.
ரேவதியும் அந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து மீனா ஒரு பேட்டியில் கூறும்போது, தேவர்மகன் திரைப்படத்தில் நான் நடிக்க சென்றேன். மேக்கப் போட்டு பார்த்தார்கள். எல்லாம் முடிந்த பிறகு கமல் சார் திருப்தியாக இல்லை என கூறியதால் அந்த கேரட் ரேவதி அவர்களுக்கு போய்விட்டது என கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…