திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில், இறந்த ஆண் குழந்தையின் சடலம் கண்டறியப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிசுவின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு சிசுவின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த ஆண் சிசு 5 மாத நிலையில் கருக்கலைப்பு செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். மேலும் இந்த சிசுவின் எடை 320 கிராம் என தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிசுவை குப்பை தொட்டில் வீசியது யார்? எப்படி கருக்கலைப்பு செய்யப்பட்டது ? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் சூரு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.எம். புகார், தனது கல்லூரிக் கட்டிடத்தில் இருந்த தேன்கூடுகளை அப்புறப்படுத்த…
சுவிக்கி (Swiggy) உணவு விநியோக ஊழியர் ஒருவர், 6.2 கிலோமீட்டர் தூரம் பயணித்தற்காகத் தனக்கு வெறும் ₹35 மட்டுமே வழங்கப்பட்டதால்…
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்து மனு செங்கல்பட்டு நீதிமன்றத்திலிருந்து கசிந்தது தொடர்பான விவகாரம், தற்போது புதிய திருப்பத்தை…
ரயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நின்று கொண்டிருக்க, மின்னல் வேகத்தில் ரயில் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கே நின்றிருந்த மனிதர்கள்…
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாகர்கோயிலுக்குச் சென்றபோது, திரு. கோமதம் வீரராகவன் கிரிஜா என்ற சிறுமியைச் சந்தித்த நெகிழ்ச்சியான காணொளி…
இந்தியாவின் போட்டி நிறைந்த வங்கித்துறையில் நிலவும் கடும் பணி அழுத்தம் காரணமாக, 24 வயதான ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர்…