சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மீனா குமாரி. இவர் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்டவர். சினிமா ஒளிப்பதிவாளர் ஆன உறவினர் ஒருவரின் மூலம் ‘கருப்பு நிலா’ திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித்துடன் கிரீடம் திரைப்படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தார்.
வெள்ளி திரையில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்த இவர் ,சற்று பட வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரையில் கால் பதித்தார். தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றொரு சூப்பர் ஹிட் சீரியல் ஆன கயல் சீரியலில் காமாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஒளிபரப்பான ஒரு சில வாரங்களிலேயே டிஆர்பியில் முதலிடத்தை பிடித்த சீரியல் தான் கயல். இந்த சீரியல் அறிமுகமான முதல் வாரத்திலேயே அனைத்து சீரியல்களையும் ஓவர் டெக் செய்து முதலிடத்தை பிடித்தது.
இப்படி கயல் சீரியல் டிஆர்பிஎல் முன்னணி இருப்பதற்கு காரணம் இந்த சீரியலின் கதை மற்றும் இந்த சீரியலின் கதாபாத்திரங்கள் என்று கூறலாம். இந்த சீரியலில் ஹீரோவாக ராஜா ராணி சீரியல் சஞ்சீவும், ஹீரோயினாக நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து நடிகை மீனா குமாரி காமாட்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகை மீனா குமாரி கயல் சீரியலின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…