தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ‘கண்ணழகி’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை மீனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினி, கமல், விஜயகாந்த் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து முத்திரை பதித்த மீனா, தற்போது குணச்சித்திர வேடங்களிலும் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்த தலைமுறையில் உங்களுக்குப் பிடித்த அழகான ஹீரோ யார்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் புன்னகையுடன் பதிலளித்த மீனா, “இப்போது இருக்கும் ஹீரோக்களில் எனக்கு யாரும் சட்டென்று நினைவுக்கு வரவில்லை; எனக்கு எப்போதும் என்னுடைய ஆள் அஜித் தான் நினைவுக்கு வருகிறார். அவர் இப்போதும் மிகவும் அழகாக இருக்கிறார்” என்று வெளிப்படையாகக் கூறி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
மீனாவின் இந்த சுவாரசியமான பதில் அஜித்தின் ரசிகர்கள சமூக வலைதளங்களில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக அஜித் மற்றும் மீனா இணைந்து நடித்த ‘ஆனந்த பூங்காற்றே’, ‘வில்லன்’, ‘சிட்டிசன்’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பேட்டியின் ஊடாக மற்றொரு சுவாரசியமான நினைவையும் மீனா பகிர்ந்துள்ளார். ஒருமுறை நடிகர் விஜய்யைச் சந்தித்தபோது, “உங்களுக்கு அஜித் தான் ஃபேவரட் என்று எனக்குத் தெரியும், அதனால் தான் என்னோடு நீங்கள் ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்கவில்லை” என்று விஜய் தன்னிடம் நகைச்சுவையாகக் கலாய்த்த சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். விஜய் படமான ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே மீனா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாவின் இந்த எதார்த்தமான மற்றும் நேர்மையான பேச்சு தற்போது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் வைரலாகி வருகிறது.
